▼
Sunday, April 19, 2020
சென்னையில் ஒரு நாள்
சென்னையில் ஒரு நாள்,
நாங்கள் Platelet Club ,வெளியூரில் இருந்து சென்னை வந்து சிகிச்சை எடுத்து கொள்ளும் புற்றுநோய் போராளிகளுக்கு தேவையான இரத்தம் மற்றும் தட்டனு (platelet) தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு தன்னார்வளர்களாக ஒன்று சேர்ந்து உதவி வருகிறோம்.
இக்குழும உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு தட்டனு கொடையாளி (Platelet Donor) என்பது எங்கள் தனி சொத்து.
ஒரு முறை தட்டனு தானம் செய்வதன் மூலம், ஒருவர் எங்கள் குழுமத்தின் உறுப்பினராகிறார்.
இக்குழுமத்தை ஒருங்கிணைப்பவர் ஸ்ரீவட்ஸவேமா. இவரது அன்றாட வழக்கம், தினமும் காலையில் எந்த எந்த மருத்துவமனையில் என்னன்ன இரத்தம் மற்றும் தட்டனு தேவை இருக்கிறது என்பதை அறிந்து, அதை குழு உறுப்பினர்களிடம் பகிர்ந்து, யார் அதில் தானம் செய்ய தயாராக உள்ளார் என தெரிந்துகொண்டு ; அதை மருத்துவமனை மற்றும் நோயாளியின் குடும்பத்தினருக்கு தெரிவித்து அவர்களின் சுமையை குறைப்பதே ஆகும்.
இதை தவிர தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் உள்ள இரத்த தேவைகளையும் தனது நட்பு வட்டாரத்தின் துணையோடு பூர்த்தி செய்து வருகிறார்.
இவ்வாறு வழக்க நாட்கள் வலுவிழந்த புயலென கடக்க,
மே 8ஆம் நாள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து சுரேஷ் என்ற புற்றுநோய் போராளிக்கு இரத்த தேவை இருப்பதாக தெரிய வந்தது.
இதுவும் வழக்கம் போல சாதாரண இரத்த தேவையாக இருக்கும் என எண்ணி வழக்கம் போல் கையாண்டோம். அந்த தொலைபேசி அழைப்பின் இறுதியில் தான் தெரிந்தது அவரது இரத்த பிரிவு பாம்பே பாஸிட்டிவ் (Bombay Positive) என்று !
பாம்பே பாஸிட்டிவ் என்பது மிக அரிதான இரத்த வகையாகும் இது 1952 ஆம் ஆண்டு பாம்பேயில் கண்டுபிடிக்கப்பட்டது. மக்கள் தொகையில் 0.0004 % பேர் தான் பாம்பே பாஸிட்டிவ் இரத்தவகையை சார்ந்தவர்கள்.
பாம்பேயில் மட்டும் 10000தில் ஒருவர் பாம்பே பாஸிட்டிவாக இருப்பார் என்றும் இப்பெயற்காரணியை விளக்குகிறது ஒரு புள்ளியியல் செய்தி.
[ What is Bombay Blood Group ?
The h/h blood group, also known as Oh or the Bombay blood group, is a rare blood type. This blood phenotype was first discovered in Bombay, now known as Mumbai, in India, by Dr. Y. M. Bhende in 1952. It is mostly found in India, Bangladesh, Pakistan, and Iran.
This very rare phenotype is generally present in about 0.0004% (about 4 per million) of the human population, though in some places such as Mumbai (formerly Bombay) locals can have occurrences in as much as 0.01% (1 in 10,000) of inhabitants ]
இதை அறிந்து, எங்கெல்லாம் பாம்பே பாஸிட்டிவ் கை இருப்பு உள்ளது என தேடினோம். திருப்பதியில் இருப்பதாக அறிந்து மே 9 அன்று தொடர்பு கொண்டோம்.
அவர்கள் இட்ட சட்ட ரீதியான கேள்விகள் மற்றும் தேவைகள் எங்களை காலம் தாழ்த்தியது.
பிறகு பெங்களூருவில், ஜெயநகரில் உள்ள ஜயதேவ மருத்துவமனை இரத்தம் தர முன் வந்தனர்.
இரத்தம் கிடைத்தது என்று பெருமூச்சு விட,
யார் அதை எடுத்துவருவார் என்ற அடுத்த கட்ட தேடல் ஆரம்பம் ஆயிற்று.
Whatsapp ஸ்டேட்டஸ் போட்டு கேட்டோம் யாரேனும் பெங்களூருவில் இருந்து சென்னை வருகிறீர்களா என்று ;
நேரம் கடக்க நாமே சென்று எடுத்துவரலாம் என்று முடிவெடுக்கும் சூழலில், எங்களது வழக்கமான தட்டனு கொடையாளி அருணன் ராமநாதன் - தான் எடுத்து வருவதாக ஒப்புக்கொண்டு, இரவு 8.30 மணிக்கு இரத்தத்தை வாங்கிக்கொண்டு பேருந்து ஏறினார்.
காலை 3 மணிக்கு சென்னை வந்தடைந்தார், அவரது நண்பரின் உதவியுடன் தானே சென்று காலை 4.30 மணிக்கு இரத்தத்தை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
இப்பொழுது சுரேஷின் சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கிறது. அவர் போராட்டத்தில் அதி விரைவில் வெல்வார்.
இவ்விடத்தில் whatsapp status க்கு நான் இரண்டு நாட்கள் கழித்து சென்னை வருகிறேன், தேவை இருந்தால் சொல்லுங்கள் என்று கூறிய நண்பர்களுக்கும், நான் எடுத்து வருகிறேன் கூறிய அருணனுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

No comments:
Post a Comment